Month: March 2026

கைதியின் பணத்தில் சொகுசு வாழ்க்கை – சிக்கிய பொலிஸ் அதிகாரி

ஹெரோயின் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி, 6 இலட்சம் ரூபாவிற்கும் அதிகப் பணத்தை மோசடியாகப் பெற்ற குற்றச்சாட்டில் கொஸ்கொட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றத்தடுப்புப்…

எண்ணெய் பீப்பாய் விலை 200 டொலரை தாண்டும் – ஈரான் எச்சரிக்கை

ஈரான் தமது தாக்குதல் கொள்கையில் புதிய வியூகத்தை வகுத்துள்ளதாக தெஹ்ரானின் காதம் அல்-அன்பியா இராணுவ தலைமையகத்தின் ஊடகப்பேச்சாளர் இப்ராஹிம் சோல்பகாரி தெரிவித்துள்ளார். அதற்கமைய பரஸ்பர தாக்குதல் கொள்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனிமேல் தாக்குதலுக்குத் தாக்குதல் என்ற புதிய கொள்கையைப் ஈரான்…

ஈரானியக் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்: 16 ஏவுகணைப் படகுகள் அழிப்பு

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 16 கப்பல்கள் உட்பட பல படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளிக் காட்சிகளை அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் தனது X சமூக வலைதளப்…

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கோரிக்கை

புதிய பொருளாதார வாய்ப்புகளை உச்ச அளவில் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயார் என கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற இலங்கை இளம்…

ஈரான் கடற்படையினரின் சடலங்களை மீளப்பெற ஈரான் நடவடிக்கை

இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான ‘ஐரிஸ் டெனா’ கப்பலைச் சேர்ந்த கடற்படையினரின் சடலங்களை விரைவில் தாயகத்திற்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் ‘பார்ஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,…

மத்திய கிழக்கு போர்: பொருளாதார கண்காணிப்புக் குழு நியமனத்திற்கு அனுமதி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக, பொருளாதார கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழிலாளர் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில்,…

போர் எப்போது முடியும் என்பதை நாங்களே தீர்மானிப்போம்: ட்ரம்ப்பிற்கு ஈரான் பதிலடி

ஈரான் போர் முடிவுக்கு வருவது குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கருத்திற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான இராணுவ நடவடிக்கைகளை எப்போது நிறுத்துவது என்பதைத் தாங்களே தீர்மானிப்போம் என ஈரான் இதன்போது தெரிவித்துள்ளது.…

எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க, பாகிஸ்தான் அரசு பல கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் பாடசாலைகளுக்கு தற்காலிக விடுமுறை, அரச ஊழியர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு குறைப்பு மற்றும் வாரத்திற்கு…

இன்று ஈரானுக்கு ‘கறுப்பு தினமாக’ அமையுமா? அமெரிக்கா எச்சரிக்கை!

ஈரான் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களை விட மிகவும் பாரதூரமான மற்றும் கடுமையான தாக்குதல்கள் இன்று (10) நடத்தப்படும் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். இன்று பென்டகனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அதிரடி…

எரிபொருள் நுகர்வை குறையுங்கள்: பொதுமக்களிடம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (10) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், தம்மால் இயன்றவரை…