Category: வெளிநாட்டு செய்திகள்

கட்டார் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தமது அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அந்நாட்டில் உள்ள அமெரிக்க பிரஜைகளை பாதுகாப்பான இடங்களுக்கு…

நேபாள ஜனாதிபதி பதவி விலகினார்

நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பௌடேல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். நாடு முழுவதும் இடம்பெற்று வரும் கடுமையான மக்கள் எதிர்ப்புகள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் மத்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேபாளத்தில் விமான நிலையம் மூடல்

நேபாளத்தில் தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தின் (TIA)அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டமையை கண்டித்து…

நேபாளத்தில் ஜென் Z போராட்டம்- 19 பேர் உயி​ரிழப்பு

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்து நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200 இற்கும்​ மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதனையடுத்து இந்த தடை உத்தரவை நேபாள அரசு மீள பெற்றுள்ளது.…

மனித புதைகுழி விவகாரம் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இடம்பெற வேண்டும் – பிரித்தானியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரின் அண்மைய இலங்கை விஜயம் மற்றும் அறிக்கைக்கு பிரித்தானியா…

நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பிரான்ஸ் பிரதமர் பதவி நீக்கம்

பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தமது அரசாங்கத்தின் மீது கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார். பிரான்சின் தேசிய சட்டமன்றம் 364 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை பதவியில் இருந்து நீக்கி அவரது சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த வாக்களித்தது. மேலும் 25 பாராளுமன்ற…

புற்றுநோய் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிப்பு!

ரஷ்ய வின்ஞானிகள் உருவாக்கி உள்ள புற்றுநோய் தடுப்பூசி மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில கொரோனா தடுப்பூசிகளை போல எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்ட்ரோமிக்ஸ் என்ற புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி உள்ளது. புற்றுநோய் செல்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு…

ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள டொனால்ட் டிரம்ப்!

காசாவில் உள்ள பணயக்கைதிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள, அமெரிக்க ஜனாதிபதி அனைவரும் இந்தப் போர் முடிவுக்கு வருவதைக் காண விரும்புவதாகவும், இஸ்ரேலும் தனது நிபந்தனைகளை…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இன்று (08) ஆரம்பமாகிறது. 

இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது…

40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்

அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த…