Category: உள் நாட்டு செய்திகள்

வாகனங்களுக்கான லீசிங் வசதிகளுக்கான வீதத்தில் திருத்தம்

வாகனங்களுக்கான குத்தகை வசதிகளை வழங்குவதற்கான வீதங்களை திருத்தம் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதன்படி, தற்போது வணிக வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை வீதம் 70% ஆகவும், தனியார் வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை வீதம் 50% ஆகவும் திருத்தம் செய்ய இலங்கை…

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவோருக்கான விசேட அறிவிப்பு

உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவை இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்த முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு எதிர்பாராத காலநிலையால் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய…

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம் அவர்களின் புதல்வருமான வைத்தியர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று (07) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். காலமாகும் போது அவரது…

2026 வரவு செலவுத் திட்டம் – முழுமையான உரை இதோ!

2026 ஆம் ஆண்டுக்கான சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு – செலவுத்திட்டம் மற்றும் தேசிய மக்கள் சக்கியின் 2 ஆவது வரவு – செலவுத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 07) நிதியமமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றில்…

பேருந்தின் மீது முறிந்து விழுந்த மரம் – ஒருவர் பலி

தெல்தோட்டை – கண்டி வீதியில் ஹால்வத்த பகுதியில் பேருந்து மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீதே இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் பேருந்தில்…

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) தினத்துடன் நிறைவடைகிறது. அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் 08ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு…

தெதுரு ஓயா பெருந்துயர் -உயிர்பிழைத்த சிறுவனின் பதறவைக்கும் வாக்குமூலம்!

சிலாபத்தில் அமைந்துள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிரிபத்கொட பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்ற குழுவில் இருந்த 10 பேர், நேற்று (05) பிற்பகல் தெதுரு ஓயாவின் பாலத்தின் கீழ்…

புத்தளத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு மற்றும் ‘போதையில்லா நாடு – ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து…

நீர்கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

நீர்கொழும்பின் சில பகுதிகளில் நாளை (07) 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு இடைநிறுத்தப்படும்…

பல்லேகலையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீப்பரவல்

கண்டி பல்லேகலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த கண்டி தீயணைப்பு படையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.