Month: March 2026

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன் நிறைவில் தலைப்பிறை கண்ட பின்னர் கொண்டாடும் ஈதுல் பித்ர் பெருநாளானது, இஸ்லாமிய நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தர்ப்பமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…

மின்சாரக் கட்டணமும் அதிகரிக்குமா? – அமைச்சர் நலிந்தவின் விளக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (20) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்…

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு – மற்றுமொரு பெண் சடலமாக..

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையில் நேற்று கடத்தப்பட்ட பெண் ஒருவர், கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவின் நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து உயிருக்கு ஊசலாடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அதே கிணற்றிலிருந்து மற்றுமொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும்…

சுகாதார சேவையை முன்னெடுத்துச் செல்லத் தேவையான எரிபொருள் கையிருப்பில்

சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு நாட்டில் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். “இரண்டு மாதங்களில் முழுமையாக எரிபொருள் தீர்ந்து போனாலும், அடுத்த…

நாளை மற்றும் நாளை மறுதினம் எரிபொருள் நிலையங்கள் மூடப்படாது

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை மூடுவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அந்த கூட்டுத்தாபனத்தின் முகாமை…

குவைத் எண்ணெய் நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல்

தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை. மினா அல்-அஹ்மதி சுத்திகரிப்பு நிலையத்தில்…

500 லீற்றர் எரிபொருளை பதுக்கியவர் கைது

ஹம்பாந்தோட்டை, கட்டுவெவ சல்மல்யாய பகுதியில் சுமார் 500 லீற்றர் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, வீட்டிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 480…

மசகு எண்ணெய் பீப்பாய் விலை 180 டொலரை கடக்கும் அபாயம்

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் ஏப்ரல் இறுதி வரை தொடருமானால், ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 180 அமெரிக்க டொலர்கள் வரை உயரும் அபாயம் உள்ளதாக சவுதி அரேபிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த…

ஏற்றுமதிக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் – ஜனாதிபதி

ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய…

நுரைச்சோலை மின் உற்பத்தி வீழ்ச்சி தொடர்பில் வௌியான தகவல்

தரமற்ற நிலக்கரி பயன்பாடு காரணமாக நுரைச்சோலை மின்நிலையத்தின் மின் உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சைக்குரிய பின்னணியில், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைவடைந்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த பொருளாதார குறிகாட்டி அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி,…