காசாவில் உள்ள பணயக்கைதிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள, அமெரிக்க ஜனாதிபதி அனைவரும் இந்தப் போர் முடிவுக்கு வருவதைக் காண விரும்புவதாகவும், இஸ்ரேலும் தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார். 

அதன்படி, ஹமாஸும் தனது நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்றும், அவற்றை ஏற்காததால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஹமாஸுக்கு முன்னரும் எச்சரித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த எச்சரிக்கை தனது இறுதி எச்சரிக்கை என்றும், எதிர்காலத்தில் இனி எந்த எச்சரிக்கைகளையும் வெளியிட மாட்டேன் என்றும் அமெரிக்க அதிபர் தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் வலியுறுத்தியுள்ளார்.

By RifkaNF