Month: January 2026

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்பில் நிலநடுக்கம்!

திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடற்பரப்பில் இன்று (31) பிற்பகல் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 3.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3.49 மணியளவில் இந்த…

டி20 உலகக்கிண்ண அணியிலிருந்து ஸ்மித், பெட் கம்மின்ஸ் நீக்கம்!

எதிர்வரும் டி20 உலகக்கிண்ணத் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து சிரேஷ்ட வீரர்களான பெட் கம்மின்ஸ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். பெட் கம்மின்ஸின் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தைக் கருத்திற்கொண்டு, அவுஸ்திரேலிய தெரிவுக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. அவருக்குப்…

தரமான மனித வளத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்கு

எமது நாடு பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியாகப் பாதுகாப்பானதாக அமைய வேண்டுமானால், தரமான மனித வளம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அதற்குத் தேவையான மிக முக்கியமான காரணி கல்வி எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வித்துறையில் ஒரு…

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெட்ரோலிய பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு, வைத்தியசாலைகள், மருந்தகங்கள், பயணிகள் அல்லது சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொங்கோவில் சுரங்கம் இடிந்து விழுந்து 200-க்கும் மேற்பட்டோர் பலி

கிழக்கு கொங்கோவில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்து ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இப்பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும் என்பதுடன், அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கோல்டன் (Coltan) கனிமத்தை வழங்கும்…

அதிரடியாக குறைந்த தங்க விலை !

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள் 20,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்கச் சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கமைய, இன்று (30) காலை கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் தங்கப் பவுன்…

திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்

அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார். இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்தது. இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் கலந்துகொண்ட சபீனா யூசுப், இறுதிச் சுற்றின் முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவானதுடன்,…

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஜனாதிபதியினால் மற்றுமொரு பெயர் பரிந்துரை

தற்போது வெற்றிடமாக உள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் மற்றுமொரு பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாளை (31) அரசியலமைப்பு சபை கூடவுள்ளதுடன், இதன்போது இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர்…

இங்கிலாந்துக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி தற்சமயம் பல்லேகலயில் இடம்பெற்று வருகிறு. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. மாலை 06.30 மணிக்கு நாணயச் சுழற்சி…

ஜனவரியில் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம் அதிகரிப்பு

2026 ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் ஆகியவற்றைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதமானது 2026 ஜனவரி மாதத்தில் 2.3% ஆக…