கோப் என அழைக்கப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கீழுள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 02ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது அரச நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், அந்த நிறுவனங்களின் பொதுவான பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் போன்ற பல பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என குழுவின் தலைவர் நிஷாந்த சமரவீர தெரிவித்தார்.
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவைச் சேர்ந்த 457 நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
