பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் இந்த அனர்த்தத்தில் சிக்கியிருந்த நிலையில் காயமடைந்து மீட்கப்பட்ட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாதுகாப்பு படையினர், பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் மீட்பு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

By RifkaNF