சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (1) இடம்பெறுகின்றது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. 

இன்றைய போட்டியில் இலங்கை அணி இரண்டு முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கியது. 

தனஞ்சய டி சில்வா மற்றும் மஹீஸ் தீக்ஸனவுக்கு பதிலாக பவன் ரத்நாயக்க மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க அதிகபட்சமாக 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

அதன்படி இங்கிலாந்து அணி 190 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடவுள்ளது. 

இரண்டு அணிகளுக்கும் ஏற்கனவே இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிக் கொண்டதன் மூலம் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது

By RifkaNF