இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (3) இடம்பெறுகின்றது.
பல்லேகலையில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்து.
இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சேம் கரன் அதிகபட்சமாக 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி 129 என்ற வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பாடவுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் ஆறுதல் வெற்றியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இலங்கை அணி களமிறங்குகின்றது.
