ராகம ரணவிரு சேவன, அபிமன்சல மற்றும் மிஹின்து செத் மெதுர ஆகிய நிலையங்களில் சிகிச்சை பெற்றுவரும் ஊனமுற்ற போர் வீரர்கள், கொழும்பு கங்காராமய விகாரையில் நடைபெறும் புனித தேவ்னிமோரி புத்தர்தாதுக்கள் கண்காட்சியை வழிபடுவதற்காக ​நேற்று (08) சென்றிருந்தார்கள். 

இந்நிகழ்வில் புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட புனித தேவ்னிமோரி புத்தர்தாதுக்கள், பெப்ரவரி 4 முதல் 10 வரை பொதுமக்களின் வணக்கத்திற்காகக் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. 

விஜயத்தின் போது மகா சங்கத்தின் முன்னிலையில் போர் வீரர்கள் சமயச் சடங்குகளில் பங்கேற்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். 

இது, ஆன்மீகத் தளத்தில் இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லமல் சிகிச்சை பெற்று வரும் போர் வீரர்களுக்கு ஆறுதல், உற்சாகம் மற்றும் மனவலிமை அளிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது. 

அதேசமயம், அவர்களின் சேவைக்காக நாட்டில் மரியாதை மற்றும் நன்றியுணர்வின் பிரதிபலிப்பாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

By RifkaNF