அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக இன்று (14) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, 14 ஆண்டுகளின் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் அவசரக் கூட்டமொன்று நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார். 

நாளை பிற்பகல் 3.00 மணிக்கு இந்த அவசரக் கூட்டம் அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

“அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இன்று சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு கூடியது. 

இது முழு சட்டத்தரணிகள் சமூகத்தையும் பாதிக்கும் ஒரு சம்பவமாகும். இது எமது நிறைவேற்றுக் குழுவினால் மட்டும் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயமல்ல. 

எனவே, நாளை மாலை 3.00 மணிக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் அவசரக் கூட்டத்தை அழைக்கின்றோம். 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை அந்தப் பொதுக்கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும். 

நாங்கள் 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னரே இவ்வாறானதொரு கூட்டத்தை கூட்டுகின்றோம். இறுதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் அந்தத் தண்டனைப் பிரேரணை பிரச்சினையின் போதே இவ்வாறான கூட்டம் கூட்டப்பட்டது. அதன் பின்னர் 14 வருடங்கள் கழித்தே நாம் இந்தக் கூட்டத்தை அழைக்கின்றோம்” என அவர் தெரிவித்தார்.


அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய, 14 ஆண்டுகளின் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களினதும் அவசரக் கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார். 

By RifkaNF