லக்விஜய நிலக்கரி விநியோகத்தை ஆராய 7 பேர் கொண்ட நிபுணர் குழு நியமனம்!லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது: பேராசிரியர் டபிள்யூ.டி.ஏ.எஸ். ரொட்ரிகோ (தலைவர்) – மின் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் கலாநிதி என்.ஏ.ஐ.டி. நிஸ்ஸங்க (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் கலாநிதி ஐ.யூ. அத்தநாயக்க (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் கலாநிதி ஆர்.எம்.டி.எஸ். குணரத்ன (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இரசாயன மற்றும் செயன்முறைப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம் கலாநிதி உதித் விஜயவர்தன (உறுப்பினர்) – மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் கலாநிதி கீதால் சிறிவர்தன (உறுப்பினர்) – இயந்திரப் பொறியியல் துறை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் கே.எல்.ஆர்.சி. விஜயசிங்க (ஒருங்கிணைப்பாளர்) – மேலதிக செயலாளர் (மின்சக்தி மற்றும் மின்சக்தித் துறை மறுசீரமைப்புப் பிரிவு), வலுசக்தி அமைச்சு.
