முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் இன்று (25) அதிகாலை பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
