மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதன்படி, ரியாத்துக்கான தினசரி விமான சேவைகள் இன்று இரவும், டுபாய்க்கான சேவைகள் நாளையிலிருந்தும் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. மத்திய கிழக்கின் நிலைமைகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு பொதுமக்கள் www.srilankan.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
