QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை (Quota) இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, வாகனங்களுக்கான புதிய எரிபொருள் ஒதுக்கீட்டு விபரங்கள் பின்வருமாறு: கார்கள்: 15 லீற்றரிலிருந்து 25 லீற்றர் வரை அதிகரிப்பு. முச்சக்கரவண்டிகள்: எரிபொருள் ஒதுக்கீடு 20 லீற்றர் வரை அதிகரிப்பு. வேன்கள்: 50 லீற்றர் வரை அதிகரிப்பு. மோட்டார் சைக்கிள்கள்: 8 லீற்றர் வரை அதிகரிப்பு. பேருந்துகள் : 100 லீற்றர் வரை அதிகரிப்பு. எரிபொருள் விநியோகத்தை சீர்செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

By RifkaNF