இதுவரை விவசாயிகளிடமிருந்து 61,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், இதுவரை 61,449 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி 7,383 மில்லியன் ரூபா எனவும் குறிப்பிட்டார்.இதன்கீழ், 17,690 மெட்ரிக் தொன் வெள்ளை நாட்டரிசி நெல்லும், 43,836 மெட்ரிக் தொன் சிவப்பு நாட்டரிசி நெல்லும், 160,000 கிலோகிராம் வெள்ளை சம்பாவும், 756,000 கிலோகிராம் சிவப்பு சம்பாவும், 6,276 கிலோகிராம் கீரி சம்பாவும் அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.அதேபோல், உர விநியோகத்தின்போது அரச உர நிறுவனங்கள் மட்டுமன்றி, 18 தனியார் உர நிறுவனங்களும் தற்போது கொவிஜன சேவைத் திணைக்களத்தின் ஊடாக விவசாயிகளின் சாகுபடி நிலப்பரப்பிற்கு ஏற்ப உரங்களை விநியோகித்து வருவதாகவும் அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்தார்.

By RifkaNF