சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் டபிள்யூ. கே. டபிள்யூ. சரத்சந்திர குமாரவன்ச, இலங்கை அரசாங்கம் மற்றும் உலக சுகாதார அமைப்பின் சுகாதார ஆலோசகர் டாக்டர் பாலித அபேய்கோன், நிபுணர் குழுவின் பிரதிநிதியாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார சேவைகள் மற்றும் சுகாதாரப் பணியாளர் பிரிவின் தலைவர் இபாதத் தில்லன் மற்றும் பேராசிரியர் டி. சுந்தரராமன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். ஜப்பானின் சர்வதேச சுகாதாரம் மற்றும் நலவாழ்வுப் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவரும், ஜப்பான் சுகாதார அமைச்சகத்தின் முன்னாள் மூத்த உதவி அமைச்சருமான டாக்டர் நவோகோ யமமோட்டோ, ஆஸ்திரேலியாவின் மென்சீஸ் சுகாதார அமைப்பு ஆராய்ச்சித் தலைவர் பேராசிரியர் டாக்டர் அலெக்ஸாண்ட்ரா எடெல்மேன் (Professor Dr Alexandra Edelman), இங்கிலாந்தின் சுகாதாரத் துறையின் முன்னாள் தேசிய இயக்குநரும், தொழில்முறை தரநிலைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் ஹாரி கேடன் (Professor Harry Cayton), தாய்லாந்து சுகாதார அமைச்சகத்தின் முதன்மைப் பராமரிப்பு ஆதரவுப் பிரிவின் துணை இயக்குநர் டாக்டர் ஓரவான் தவாய்டிபோங்ஸ் (Dr Orawan Tawaytibhongs), உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தின் முதன்மை சுகாதாரப் பராமரிப்பு அதிகாரி டாக்டர் பிரியங்கா ஸ்ரேஸ்தா (Dr Priyanka Shrestha) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

By RifkaNF