உத்தேச கல்விச் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் பொருளாதாரத் திட்டம், ‘Clean Sri Lanka’ திட்டம், ‘சமூக சக்தி’ திட்டம் போன்றவை இதற்காகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுத்து “வளமான நாடு – அழகான வாழ்க்கை” யை கட்டியெழுப்பும் திட்டத்தில், உழைக்கும் மக்களை அதன் முதன்மை சக்தியாக நாம் ஆழமாக நம்புகிறோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், ஒரு தோல்வியுறாத பயணத்திற்காக நாம் பணியாற்றிக் கொண்டே கற்றுக்கொண்டும் கற்றுக்கொண்டே பணியாற்றியும் வருறோம். நிச்சயமாக ஒரு சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உங்கள் மனசாட்சிக்கு இணங்க எம்முடன் இணையுமாறு அன்பான உழைக்கும் மக்களுக்குச் சகோதரத்துவத்துடன் அழைப்பு விடுப்பதோடு அர்த்தமுள்ள தொழிலாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

By RifkaNF