அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326 ரூபாயைக் கடந்தது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி இன்று (12) 326 ரூபாய் எல்லையைத் தாண்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய தினசரி நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 326.12 ரூபாவாக பதிவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதிக்குப் பிறகு, ரூபாவின் விற்பனை விலை இந்த எல்லையைத் தாண்டியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இலங்கை ரூபாய் டொலருக்கு எதிராக சுமார் 3.6% வீழ்ச்சியடைந்துள்ளது.

