Category: உள் நாட்டு செய்திகள்

ரணிலுக்கு எதிராக மார்ச்சில் வழக்கு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்து, மார்ச் மாதத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமா அதிபர் இன்று (28) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கொழும்பு…

இரு இந்திய பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான “வராஹா” (Varaha) மற்றும் “அதுல்யா” (Atulya) ஆகிய கப்பல்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதோடு, இலங்கை கடற்படையினரால் கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைவாக வரவேற்கப்பட்டன. 96.2 மீட்டர் நீளமான கடல்சார் ரோந்துக் கப்பலான “வராஹா”…

தெற்கு கடலில் கைதான 11 பேரும் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு

நேற்று தெற்கு கடற்பகுதியில் கடற்படையினால் பொறுப்பேற்கப்பட்ட 2 பல நாள் படகுகளில் இருந்தும் மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 450 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்திச் சென்றதாக சந்தேகத்தின் பேரில்…

கிளிநொச்சியில் 2 மோட்டார் குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி – பரந்தன், உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் இரண்டு மோட்டார் குண்டுகள் நேற்று (23) கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே, இரண்டு 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் இருப்பதை அப்பகுதி…

கல்லடி பாலத்தில் இருந்து பாய்ந்து யுவதி உயிர்மாய்ப்பு

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. இவரது சடலம் மீட்கப்பட்டதையடுத்து, கடந்த 23 நாட்களில் மாவட்டத்தில் பதிவான தற்கொலைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.…

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் நீடிப்பு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 48…

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (23) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த…

பேராதனை பல்கலை மாணவர்களை தாக்கியோர் கைது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், அஸ்கிரிய, கொதட்டுவ மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில்…

தைப்பொங்கல் தினத்தில் 7 வயது சிறுமி துஷ்பிரயோகம்

நாவலப்பிட்டி, வெஸ்ட்வேர்ல்ட் தோட்டத்தின் ரிலாகல பகுதியில் தைப்பொங்கல் தினத்தன்று (15) 7 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 35 வயதுடைய நபரொருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் இன்று (16) கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியும் சந்தேக நபரும் ஒரே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்…

யாழில் ஜனாதிபதியின் நிகழ்வுக்கு பேருந்தில் அழைத்து வரப்பட்ட மக்கள்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று (15.01.2026) இடம்பெற்ற நிகழ்வுக்கு மக்கள் அழைத்து வரப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. யாழ்ப்பாணம் வேலணையில் நேற்று (15.01.2026) இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார். அதன்படி, குறித்த நிகழ்வுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து மக்கள்…