Category: உள் நாட்டு செய்திகள்

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய்

கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை விரைவாக…

123 வருடம் பழைமையான பெந்தர பாலம் இடிந்து விழுந்தது

மூடப்பட்டிருந்த பெந்தர பழைய பாலம் நேற்று (26) இரவு முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. 1902 ஆம் ஆண்டளவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பாலம், காலி வீதியில் மேல் மாகாணத்தையும் தென் மாகாணத்தையும் இணைக்கும் ஒரு முக்கிய இடமாகும். சில வருடங்களுக்கு முன்னர் இந்தப்…

மோசமான வானிலை – உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று (27) ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. இந்த அனர்த்த நிலைமையால் 21 பேர் காணாமல்…

உதவி எண்கள் – மாவட்ட அனர்த்த மேலாண்மை ஒருங்கிணைப்புப் பிரிவுகள் (DDMCU)

📞 உதவி எண்கள் – மாவட்ட அனர்த்த மேலாண்மை ஒருங்கிணைப்புப் பிரிவுகள் (DDMCU) 📞*முயற்சி, பாதுகாப்பு, பதிலளிப்பு! | 📍 மாவட்டம் | ☎️ அலுவலக எண் | 📱 கைபேசி எண் | 📧 மின்னஞ்சல் || யாழ்ப்பாணம் |…

உர மானிய விலை தொடர்பில் தீர்மானம்

உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு உர மானிய விலையைத் தீர்மானிக்க வேண்டும் என விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார். நெல் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முறைப்படியான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பது தொடர்பில், ஜனாதிபதி செயலகத்தில்…

வாகங்களின் விலை குறைவடைந்துள்ளதாக – இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது வாகனங்களின் விலைகளும் குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். இன்று (26) முற்பகல் மத்திய…

கொழும்பு – கண்டி வீதி கடுன்னாவ பகுதி மீண்டும் மூடல்

கொழும்பு – கண்டி பிரதான வீதி இன்று (26) இரவு 10 மணி முதல் மீண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவு காரணமாக முன்னதாக குறித்த வீதி கனேதென்ன பகுதியில் மூடப்பட்டிருந்தது. பின்னர் ஒரு…

மகாவலி ஆற்றுப் படுக்கையை அண்டிய பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. மகாவலி ஆற்றின் சில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நேற்று (25) இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக,…

சிவப்பு எச்சரிக்கை: 150 மி.மீ வரை கடும் மழை!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ (Red Alert) நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (25) பிற்பகல் 03.45 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கையானது நாளை (26) பிற்பகல் 03.45 மணி வரை செல்லுபடியாகும்.…