Category: உள் நாட்டு செய்திகள்

வவுனியா மாநகர எல்லைக்குள் புகைத்தல் பகுதிகளுக்கு தடை!

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவங்களுடன் இணைந்தவாறாக உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு நேற்று (11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் நேற்றைய அமர்வின் போது குறித்த உத்தரவினை முதல்வர் காண்டீபன் வழங்கியுள்ளார். குறிப்பாக வவுனியா நகரத்தில் உள்ள சில உணவங்களுக்கு பின்புறமாக புகைப்பிடிப்பதற்கென சிறிய…

பிரபாகரன் பயங்கரவாதி என யாராவது கையுயர்த்தி கூறுங்கள் பார்ப்போம்

பிரபாகரன் பயங்கரவாதி என்று இங்கே யாராவது கையுயர்த்தி கூறுங்கள் பார்ப்போம் என சபையில் பகிரங்கமாக தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன் எம்பி, வடக்கில் உங்களை சிங்கள பிரபாகரனாக கருதியே தமிழ் மக்கள் வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார். பிரபாகரன் பயங்கரவாதி இல்லை என்பது போலவே…

ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டம் அமுலுக்கு

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார். இதன்மூலம் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டம் உடன் அமுலுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு நேற்று…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் நேற்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர். எரிபொருள் அகற்றப்பட்ட எண்ணெய் தாங்கி ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப்பணியின் போது…

யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம்!

நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாமிற்கு சமூகநல நோக்கில் பெண் கட்டாகாலி நாய்களைப் பிடித்து தருபவர்களுக்கு ஒரு நாய்க்கு 600 ரூபா வீதம் சன்மானம் வழங்கப்படும் என நல்லூர் பிரதேச சபை…

யாழில் வாள் வெட்டு – ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது, வேன் ஒன்றில் பிரவேசித்தவர்கள் இந்த வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் காயமடைந்த…

இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கை தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசிலை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இறக்கும், ஊனமுற்ற மற்றும் வெளிநாடுகளில் காணாமல் போதல் உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களின் பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக புலமைப்பரிசில் திட்டமொன்றைச் செயல்படுத்த ஜனாதிபதி…

எல்ல பேருந்து விபத்து ஏற்படக் காரணம்!

எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தானது சாரதியின் கவனயீனத்தாலேயே ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். சாரதியினால் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் அது வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக அவர்…

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை யோசனை! 03 நாடுகள் இலங்கையை ஆதரிக்குமா?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி பிரதிபா மகாநாம ஹேவா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக ஒரு யோசனையை…

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்

யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்தி குறிப்பொன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின்…