Category: அரசியல் செய்திகள்

பாகிஸ்தானின் 2 போர்க்கப்பல்கள் கொழும்பில் நங்கூரமிட்டுள்ளன!

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை இன்று (12) வந்தடைந்துள்ளன. ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்களே இவ்வாறு சினேகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக் கடற்படையினரால் அக்கப்பல்கள் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளன. கொழும்பு…

மேற்காசியப் பிராந்தியப் போர்நிறுத்தத்தை வரவேற்கிறது இலங்கை

மேற்காசியப் பிராந்தியத்தில் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறித்தும் அரசாங்கம் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழலைத் தணிப்பதற்கான ஒரு தீர்க்கமான நடவடிக்கையாக இதனை…

இலங்கையின் பணவீக்கம் 5.2% ஆக உயரும் என எதிர்வு கூறல்

இலங்கையின் பணவீக்கம் 2025-ஆம் ஆண்டில் காணப்பட்ட -0.5 மட்டத்தில் இருந்து 2026-ஆம் ஆண்டில் 5.2% ஆக அதிகரிக்கக்கூடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எதிர்வு கூறியுள்ளது. அந்த வங்கியினால் இன்று (10) வெளியிடப்பட்ட 2026 ஏப்ரல் மாதத்திற்கான ஆசிய அபிவிருத்தி…

கோட்டை ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஆரம்பம்

நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் புதியதொரு திருப்புமுனையை அடையாளப்படுத்தும் வகையில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திலான போக்குவரத்துப் பரிமாற்ற மையமாக நவீனமயமாக்கும் பாரிய திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று 9, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

ஜனாதிபதி தலைமையில் இன்று 59 ஆவது தேசிய புத்தரிசி விழா

59 ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில், மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த மாபெரும் கலாசார விழாவின் போது, விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை புத்தபெருமானுக்கு அர்ப்பணித்தனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி…

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சரிவு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள், 2026 பெப்ரவரி மாதத்தில் காணப்பட்ட 7,270 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து, 2026 மார்ச் மாதத்தில் 7,019 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை 3.5 சதவீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சீன மக்கள்…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 5 மில்லியன் ரூபாவில் புதிய வீட்டுத் திட்டம்!

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி, மண்சரிவு மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அதிக…

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம்

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள புத்தாண்டு விழாக்கள் மற்றும் பல்வேறு கொண்டாட்டங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார நிறுவனம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை…

விசேட வைத்திய நிபுணரின் வைத்தியசாலைப் பதவிகள் நீக்கம் – GMOA

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களின் வைத்தியசாலை பதவிகள் நீக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சுமத்தியுள்ளது. தரநிலைப்படுத்தப்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ தென்னகோன்…

புத்தாண்டில் QR அறிமுகமாகும் விதம் குறித்து ஜனாதிபதி விளக்கம்

சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப் பிரபலப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்…