Month: August 2025

ஓகஸ்ட் மாதத்தில் 99,000ஐ தாண்டிய சுற்றுலா பயணிகள்

ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை மொத்தம் 99,406 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன. அந்த அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 19,572 சுற்றுலாப் பயணிகள் இந்த மாதம் நாட்டுக்கு வருகை…

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும்!

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. இதற்காக பொருத்தமான நபர்களை அடையாளம் காணுவதற்காக தற்போது அறிவுறுத்தப்பட்டு வருவதாக சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்காராச்சி தெரிவித்தார். விவசாய மற்றும்…

நல்லூர் ஆலயத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று (16) ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று அதிகாலை வந்த இந்த தொலைபேசி அழைப்பையடுத்து விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் ஆலய சூழலில்…

காலி குமாரியை மீள தடமேற்றும் பணிகள் தொடர்ந்தும்

கரையோர ரயில் மார்க்கத்தில் கிங்தொட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்ட காலி குமாரி கடுகதி ரயிலை மீள தடமேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மருதானை ரயில் நிலையத்திலிருந்து பெலியத்த நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், டொங்கா தீவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

மன்னாரில் 14 ஆவது நாளாக தொடரும் போராட்டம்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (16) 14 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. -மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற…

நாட்டில் இருந்து 20 சதவீத பொறியியலாளர்கள் வௌியேற்றம்

கடந்த சில ஆண்டுகளாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்களில் சுமார் 20 வீதமானோர் நாட்டில் இருந்து வௌியேறியுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் இலங்கை மின்சார சபையின் 226 பொறியியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அதன் ஊடக…

மனித உருவ ரோபோக்களின் ஒலிம்பிக் சீனாவில் ஆரம்பம்

உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் பீஜிங்கில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச்…

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில்

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். நாளை மாலை 4.00 மணி முதல் குறித்த ஊழியர்கள் தமது சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு: உயிரிழப்பு 60 ஆக உயர்வு

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. அதாவது ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீற்றர் மழை கொட்டியது. இதனால் சோஷ்டி கிராமத்தில்…