இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. 

தம்புள்ளையில் இந்தப் போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

இரண்டு அணிகளும் விளையாடிய முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

இதனையடுத்து இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 

இந்நிலையில் தொடரை சமப்படுத்துவதற்காக இலங்கை அணி இன்றைய தீர்மானமிக்க போட்டியில் களமிறங்கும் அதேவேளை தொடரை வெற்றிக் கொள்ளும் முனைப்புடன் விளையாடவுள்ளது. 

தொடரில் பாகிஸ்தான் அணி 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது. 

உலக கிண்ண 20 இருபதுக்கு தொடருக்கு முன்னதாக இடம்பெறும் இந்த தொடரான 2 அணிகளுக்கும் மிக முக்கியமானதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

By RifkaNF