Month: August 2025

இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து – 22 பேர் காயம்

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தும், சுற்றுலா சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இலங்கை போக்குவரத்து…

யாழ்ப்பாணத்தில் இந்திய சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினமான இன்று (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு, சுதந்திர தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டன. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் காலை 9.00 மணியளவில் இந்தியாவின்…

குவைத்தில் சோகம்: விஷ சாராயம் குடித்து 13 பேர் பலி

குவைத்தில் விஷ சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத்தில் இந்தியர்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் அங்கு விஷ சாராயம் குடித்த 63 பேர் உடல் நலம்…

பாகிஸ்தானில் ஹெலிகொப்டர் விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில், இன்று (15) மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற MI-17 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், இரு விமானிகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். வடக்கு பாகிஸ்தானில் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப்…

செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்ற பால்குட பவனி இன்று (15) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 11 ஆம்…

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6 .15 மணிக்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபட் அன்றாடி,…

கொழும்பு பங்குச் சந்தையின் மற்றுமொரு மைல்கல்

இலங்கை பங்கு சந்தை வரலாற்றில் மற்றொரு வரலாற்று மைல்கல்லைக் இன்று (15) கடந்துள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் இன்று (15) முதன்முறையாக 20,000 புள்ளிகளைத் கடந்துள்ளது. அதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 289.69 புள்ளிகள்…

தம்புள்ளை விவசாயக் களஞ்சியசாலைக்கு மின் துண்டிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் அண்மையில் தம்புள்ளையில் திறந்து வைக்கப்பட்ட வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தும் விவசாயக் களஞ்சியசாலைக்கான மின் துண்டிக்கப்பட்டுள்ளது. குறித்த களஞ்சியசாலையின் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே, 8,409,000 ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளமை இன்று (15) தெரியவந்துள்ளது. முன்னாள்…

சாந்த முதுன்கொடுவ கொலை – சந்தேகநபரின் வாக்குமூலம்

முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பனா மந்திரி என்ற சாந்த முதுன்கொடுவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு முக்கிய தகவல்களை மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவு வௌிப்படுத்தியுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள கொலைச் சம்பவத்தின் போது காரை…

10 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்

நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் ஒரு மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா ஓகஸ்ட் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் ஏழாம் நாள் திருவிழாவான மாம்பழத்…