Month: September 2025

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கும் இலங்கை மின்சார பொறியியலாளர்கள்

இலங்கை மின்சார சபையை (CEB)நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து அதன் பொறியலாளர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்டப் படி வேலை செய்யும் போராட்டம் இன்று (16) முதல் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு…

உலக வங்கியின் பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி

ஊழலற்ற இலங்கையின் தற்போதைய திட்டங்கள் குறித்து சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அதன் ஊடாக இலங்கைக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உலக வங்கி பிரதிநிதிகளிடம் தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தந்துள்ள…

தெற்கு அதிவேக வீதியில் விபத்து- பெண் ஒருவர் பலி

தெற்கு அதிவேக வீதியில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரை ஏற்றிச் சென்ற வேன் லொறியுடன் இன்று (16) அதிகாலை மோதி கோர விபத்தொன்று பதிவான நிலையில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில்,…

மறுமலர்ச்சி நகரம் உள்ளூராட்சி வாரம் இன்று முதல் ஆரம்பம்

மறுமலர்ச்சி நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட உள்ளூராட்சி வாரம் இன்று முதல் (15) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு இந்த திட்டத்தை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று ஆரம்பம்

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கை இன்று (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. 1964 ஆம் ஆண்டு கட்டப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக புதுப்பிக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும். இதற்காக…

ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காகச் செயற்படுகிறது

வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களின் வரப்பிரசாதமாக மாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 100% மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில்…

பிரபல உலக குத்துச் சண்டை வீரர் மரணம்

முன்னாள் உலக குத்துச் சண்டை சம்பியனான ரிக்கி ஹாட்டன் தமது 46 வயதில் காலமானார். கிரேட்டர் மான்செஸ்டரின் டேம்சைடில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை எனவும் அந்த நாட்டு பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.…

இந்தியாவில் திடீர் நிலநடுக்கம்

அசாமின் குவஹாத்தியில் இன்று மாலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று (14) மாலை 4:41 மணிக்கு ரிக்டர் அளவு கோலில் 5.8 மெக்னிடியுட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது வடக்கு வங்காளம் மற்றும் அண்டை நாடான பூட்டான் வரை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடல்…

பெக்கோ சமனின் மற்றொரு சகாவும் கைது

தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் மற்றொரு நெருங்கிய கூட்டாளியும் இன்று (14) கைது செய்யப்பட்டார். 39 வயதான குறித்த சந்தேக நபரை தங்காலை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் சூரியவெவவில் வைத்து கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட…

தலை,கை, கால்கள் இன்றி கரையொதுங்கிய சடலம்

மாரவில முது கட்டுவ கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கரை ஒதுங்கிய சடலத்தில் தலை, கைகள் மற்றும் கால்கள் எவையும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீல நிற காற்சட்டையுடன்…