Month: April 2026

இந்த ஆண்டில் இதுவரை 676 மரண விபத்துக்கள் பதிவு

வருடாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல குறிப்பிட்டுள்ளார். வீதி…

23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அடையாளம்

நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்தக் கடத்தல்காரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களைக் கைது செய்வதற்குப் பொலிஸார் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை…

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தூர இடங்களுக்காக நாளொன்றுக்கு மேலதிகமாக சுமார்…

விசேட வைத்திய நிபுணரின் வைத்தியசாலைப் பதவிகள் நீக்கம் – GMOA

நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் விசேட வைத்திய நிபுணர்களின் வைத்தியசாலை பதவிகள் நீக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) குற்றம் சுமத்தியுள்ளது. தரநிலைப்படுத்தப்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ தென்னகோன்…

பாடசாலைகளில் வலுசக்தியை பாதுகாக்க புதிய சுற்றறிக்கை

பாடசாலைகளுக்குள் வலுசக்தி சேமிப்பு கலாசாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ‘சுரகிமு லங்கா பாடசாலை வலுசக்தி பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்த கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் வலுசக்தி பயன்பாட்டை வினைத்திறனாக்கி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்…

7,000 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் எரிவாயு கப்பல் நாட்டுக்கு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 7,000 மெட்ரிக் தொன் எல்.பி.ஜி (LPG) எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு கையிருப்பைக் கொண்ட ‘எண்டோவர்’ (ANDOVER) கப்பல் ஹம்பாந்தோட்டை லாஃப்ஸ் முனையத்தை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம்…

இந்த வாரம் முதல் புதன்கிழமை அரச விடுமுறை இரத்து

இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த புதிய தீர்மானம் நடைமுறைக்கு வரும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்…

புத்தாண்டில் QR அறிமுகமாகும் விதம் குறித்து ஜனாதிபதி விளக்கம்

சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப் பிரபலப்படுத்தும் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்…

தேசிய QR கொடுப்பனவு விழிப்புணர்வுத் திட்டம் நாளை ஆரம்பம்

நாளை (06) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR பரிவர்த்தனைகளுக்காகவும் வர்த்தகர்களிடம் வசூலிக்கப்படும் சேவைக்கட்டணம் (Merchant Discount Rate) முழுமையாக நீக்கப்படுவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. சிறு அளவிலான வியாபாரிகள் எவ்வித மேலதிக செலவுமின்றி…

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) முற்பகல் 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு முன்னால் அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எரிபொருள் விநியோகத்தின் போது பின்பற்றப்படும் ஒற்றை…