யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது, வேன் ஒன்றில் பிரவேசித்தவர்கள் இந்த வாள்வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.