இந்தியாவின் புதிய இந்திய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (12) காலை 10 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார். ஜனாதிபதி திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழா, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. முன்னாள் மகாராஷ்டிரா ஆளுநரான சி.பி. ராதாகிருஷ்ணன், செப்டம்பர் 9 ஆம் திகதி இந்திய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டியைத் தோற்கடித்து இந்தப் பதவியைப் பெற்றார். முன்னாள் இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் ஜூலை 21 ஆம் திகதி திடீரென இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.

சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15 ஆவது கஇந்திய துணை ஜனாதிபதியாவர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தலில், மொத்தம் 781 எம்.பி.க்களில் 767 பேர் வாக்களித்தனர். அதாவது 98.2 சதவீத வாக்குகள் பதிவாகின. ராஜ்யசபா பொதுச் செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான பி.சி. மோடி இதனை அறிவித்தார். ராதாகிருஷ்ணனுக்கு 452 வாக்குகளும், எதிர்க்கட்சி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டிக்கு 300 வாக்குகளும் கிடைத்தன. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பிரதமர் நரேந்திர மோடி, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

By RifkaNF