புறக்கோட்டை 1 ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த இராணுவத்திற்கு சொந்தமான 2 வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணிகளில் பெல் ரக ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
