புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் மண்டைத் தீவு சர்வதேச கிரிக்கெட் மைதான வளாகத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
T – 56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்காவற்றுறை நீதிமன்ற அனுமதியுடன் அதனை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மண்டைத் தீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் புனரமைப்பு பணிகளை அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
யுத்த காலத்தின் போது இந்த தோட்டாக்கள் கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
