பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் கீரி சம்பா அரிசி இருப்புக்களை மறைத்து வைத்திருப்பதன் விளைவாக, இன்று சந்தையில் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகளுடன், சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கமும் குற்றம்சாட்டுகின்றனர். 

இதன் காரணமாக, கீரி சம்பா அரிசிக்கு மாற்று அரிசி வகையை அரசாங்கம் இறக்குமதி செய்வதன் மூலம் மற்றொரு மாஃபியாவும் உருவாகி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசி பற்றாக்குறை மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்வது குறித்து பல வாரங்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இந்த சூழலில், உள்ளூர் சந்தையில் கீரி சம்பா அரிசி பற்றாக்குறை மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வௌியான நிலையில், கீரி சம்பா அரிசிக்கு மாற்று அரிசி வகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது. 

அதன்படி, கடந்த 15 ஆம் திகதி முதல், ஒரு மாத காலத்திற்குள், ஒரு இறக்குமதியாளர் அதிகபட்சமாக 520 மெட்ரிக் டொன் வரை பொன்னி சம்பாவை இறக்குமதி செய்ய முடியும்.

By RifkaNF