தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (17) மாலை 4:00 மணி முதல் நாளை (18) மாலை 4:00 மணி வரை அமுலில் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:

பதுளை மாவட்டம்: ஹல்துமுல்ல 

காலி மாவட்டம்: நெலுவ 

கம்பஹா மாவட்டம்: அத்தனகல்ல 

கண்டி மாவட்டம்: தொலுவ, உடுநுவர, தெல்தோட்டை 

கேகாலை மாவட்டம்: புலத்கொஹுபிட்டிய, மாவனெல்லை, ரம்புக்கனை, யட்டியந்தோட்டை, அரநாயக்க, ருவான்வெல்ல 

குருநாகல் மாவட்டம்: அலவ்வ, ரிதீயகம 

மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்க கோரளை, பல்லேபொல, ரத்தொட, உக்குவெல, யடவத்த மொனராகலை மாவட்டம்: மெதகம 

நுவரெலியா மாவட்டம்: ஹங்குரங்கேத்த, அம்பகமுவ 

இரத்தினபுரி மாவட்டம்: இம்புல்பே, கலவான, எஹலியகொடை

By RifkaNF