சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் மார்க்கத்தில் நாளை (23) முதல் பல ரயில்களை மீண்டும் இயக்க இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

கண்டியில் இருந்து கொழும்பு கோட்டைக்கும், கொழும்பு கோட்டையில் இருந்து கண்டிக்கு செல்லும் பல ரயில்கள் மீண்டும் இவ்வாறு இயக்கப்படவுள்ளன. 

அதன்படி, நாளை (23) அதிகாலை 4. 30 மணி – கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை 

அதிகாலை 5.00 மணி – கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை 

காலை 6.15 மணி – கண்டி முதல் கொழும்பு கோட்டை வரை 

காலை 5.55 மணி – கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை 

ஆகிய ரயில் சேவைகளை மீண்டும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

இதனிடையே, கண்டியில் இருந்து பதுளைக்கு முற்பகல் 11.15 மணிக்கும் மதியம் 12.35 மணிக்கும் இரண்டு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. 

இருப்பினும், காலை 7 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி செல்லும் ரயில் நாளை (23) சேவையில் ஈடுபடுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

By RifkaNF