பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி, பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் இன்று (24) காலை 10:30 மணியளவில் நிகழ்ந்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சென்விஜயன்ஸ் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த நான்கு தொழிலாளர்களைத் தாக்கிய குளவிகள், அருகிலுள்ள இராணிகாடு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த மற்றொரு தொழிலாளரையும் தாக்கியுள்ளன. 

இதில் ஐந்து பெண் தொழிலாளர்களும், ஒரு ஆண் தொழிலாளரும் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்த ஆறு தொழிலாளர்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். 

சம்பவம் குறித்து பொகவந்தலாவ பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By RifkaNF