வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 606 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது நாளை அதிகாலை புயலாக மாற்றமடையும்.

இதன் காரணமாக எதிர்வரும் 28.10.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளைய தினம் (27.10.2025) அதிகாலை அல்லது காலை முதல் பரவலாக மழை கிடைக்கும்.

மீண்டும் வடக்கு வங்காள விரிகுடாவில் மியன்மாருக்கு அருகில் எதிர்வரும் 04.11.2025 மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. இது மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதன் நகர்வு திசை, மற்றும் ஏனைய விபரங்களை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதிப்படுத்த முடியும்.

எதிர்வரும் 29.10.2025 முதல் 06.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறைவான மழையுடன் கூடிய வானிலை நிலவும் வாய்ப்புக்கள் உள்ளன.

By RifkaNF