ஹல்துமுல்ல அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த 6 கஞ்சா சேனைகளில் 85,000 இற்கும் அதிகமான பெரிய கஞ்சா செடிகள் மற்றும் 4 சிறிய நாற்றங்கால்கள் இருந்ததாகவும், அவை அனைத்தும் தீயிட்டு அழிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹம்பேகமுவ மற்றும் கல்தொட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 

ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்கள் இன்று (03) பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

By RifkaNF