உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் நாளை (5) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் இந்த ஒத்திகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களின் கீழ் நடத்தப்படும் இந்தப் ஒத்திகையானது யாழ்ப்பாணம், காலி, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் நடத்தப்படவுள்ளது.
இந்தப் ஒத்திகையை உண்மையான சுனாமி அச்சுறுத்தல் எனக் கருதி அச்சமடையவோ அல்லது தவறாகப் புரிந்து கொள்ளவோ வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
