கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு இந்த நிதியை விரைவாக வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது.
