வெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவு வட்டுவாகல் பாலம் இரண்டு இடங்களில் உடைந்துள்ளதாக மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

முல்லைத்தீவு நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள இந்தப் பாலம், முல்லைத்தீவு நகரத்தை அடைவதற்கான முக்கிய நுழைவாயில் பாதையாகும். 

முல்லைத்தீவிலிருந்து பரந்தன் வரையான வீதியில் நந்திக்கடல் ஊடாக அமைந்துள்ள பாலத்தின் இரண்டு பகுதிகள் உடைந்ததன் காரணமாக, பாலத்தின் ஊடான அனைத்து போக்குவரத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

By RifkaNF