பலத்த மழை காரணமாக மன்னார் – இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட 157 பேர் கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளனர். 

மீட்கப்பட்டவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

இதன்படி, மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் உள்ள கூராய் மற்றும் செட்டிகுளம் என்பன வான்பாய்ந்தமை காரணமாக, அந்தப் பகுதியிலுள்ள சீதுவிநாயகர்புரம், ஆனைமோட்டை, செட்டிகுளம் மற்றும் சிவபுரம் ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட 106 பேரும், மன்னார் ஆறு பெருக்கெடுத்தமையால் செட்டிகுளம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 51 பேரும் கடற்படையினரால் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

By RifkaNF