2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை 11.57% ஆல் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
