நோர்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழுந்ததை அடுத்து, இன்று (17) மாலை முதல் அவ்வீதியுடனான போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் பெய்த பலத்த காரணமாக இந்த மண்மேடு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதியை சீரமைக்கப்படும் வரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார், சாரதிகளிடம் கோரியுள்ளனர்.