தெமட்டகொட ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று தவறான பாதையில் சென்றதால் ஏற்பட்ட இடையூறு காரணமாக, மருதானைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையேயான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன.
இன்று (21) மாலை 6:45 மணிக்கு மருதானையிலிருந்து காலிக்கு இயக்கப்படவிருந்த கடுகதி இரவு தபால் ரயிலும் இதனால் தாமதமாகியுள்ளது.
இந்த இடையூறு காரணமாக, மேல் மற்றும் கீழ் திசைகளில் இயக்கப்படவேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.