பொலிஸ் தினத்தை முன்னிட்டு இன்று (03) பொலிஸ் தலைமையகத்தில் விசேட நிகழ்வு நடைபெறவுள்ளது. 159 ஆவது பொலிஸ் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்முல்லை சந்தியிலிருந்து திம்பிரிகஸ்யாய சந்தி வரையிலான ஹேவ்லொக் வீதியில், வாகனப் போக்குவரத்துகள் கட்டுப்படுத்தப்படவுள்ளன. பொலிஸ் படைத் தலைமையகத்திற்கு எதிரே உள்ள வெளிச் செல்லும் பாதையில் அமைந்துள்ள பஸ் போக்குவரத்து இன்று (03) பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 7:00 மணி வரை ஹேவ்லொக் வீதியில் உள்ள ஃபொன்சேகா வீதி சந்தியில் உள்ள பேரூந்து தரிப்பிடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படும்.
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்முல்லை சந்திக்கு திம்பிரிகஸ்யாய சந்திக்கிடையில், இன்று பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை கனரக வாகன (கன்டெய்னர் லொரிகள் மற்றும் டிப்பர் லொரிகள்) என்பன போக்குவரத்தில் ஈடுபடுவது மட்டுப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.