ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, புதிய 18 மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளார். 

அவர்களுக்கான நியமனக் கடிதங்களை இன்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி வழங்கினார். 

விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும், சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரச தரப்பு சட்டத்தரணி ஒருவரும் புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 ஆவது உறுப்புரிமையின் (2) ஆவது உப பிரிவின்படி ஜனாதிபதியினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

இவ்வாறு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் விபரங்கள் கீழே… 

புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளின் பட்டியல் 

01. எஸ்.எஸ்.கே. விதான 

02. ஏ.எம்.ஐ.எஸ். அத்தநாயக்க 

03. ஏ.எம்.எம். ரியால் 

04. திரு. டீ.பீ. முதுங்கொடுவ 

05. எஸ்.பி.எச்.எம்.எஸ். ஹேரத் 

06. ஜே. கஜனிதீபாலன் 

07. டி.எம்.டி.சி. பண்டார 

08. எச்.எம்.பி.ஆர். விஜேரத்ன 

09. டி.எம்.ஏ. செனவிரத்ன 

10. திரு. ஏ.ஏ. ஆனந்தராஜா 

11. ஜி.என். பெரேரா 

12. ஏ. ஜுடேசன் 

13. திருமதி.டபிள்யூ.கே.டி.எஸ். வீரதுங்க 

14. ஆர்.பி.எம்.டி.ஆர். வெலிகொடபிடிய 

15. கே.டி.என்.வி. லங்காபுர, 

16. டி.எம்.ஆர்.டி. திசாநாயக்க 

17. எம்.ஐ.எம். ரிஸ்வி 

18. ஏ. ஜெயலக்ஷி டி சில்வா

By RifkaNF