ரத்தனகொல்ல மலையில் பாரிய தீப்பரவல்

பலாங்கொடை, ஹால்பே ரத்தனகொல்ல மலையில் இன்று (08) திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், தீயை அணைக்க இராணுவத்தினரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து பணியாற்றி…

நாட்டில் மீண்டும் தலைத்தூக்கும் மலேரியா

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில்…

காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசா நகரத்தை முழு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கைப்பற்றும் திட்டத்திற்கு ஓகஸ்ட் 7 ஆம் திகதி இரவு நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. காசா பகுதியின் வடக்கே அமைந்த காசா நகரம் உள்ளிட்ட…

கென்யாவில் விமான விபத்து – 6 பேர் பலி

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AMREF Flying Doctors நிறுவனத்திற்கு சொந்தமான வைத்திய விமானம் ஒன்று (Air Ambulance), சோமாலிலாந்து செல்லும் வழியில் நைரோபிக்கு அருகிலுள்ள ம்விஹோகோ என்ற குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. நேற்றிரவு (07) இந்த…

இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று (08) இரவு 6:51 மணிக்கு கம்பீரமாக வீதி வலம் வர உள்ளது. ஜூலை 30 ஆம் திகதி முதல் கும்பல் பெரஹெராவுடன் தொடங்கிய இந்தத்…

A/L மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வௌியானது

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று (07) வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களானwww.doenets.lkஅல்லதுwww.results.exams.gov.lkஇல் பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளின்…

வடகிழக்கில் தமிழ் ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் பரந்த அடக்குமுறை

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID), ஆகஸ்ட் 17 ஆம் தேதி முல்லைத்தீவில் “விசாரணைக்கு” முன்னிலையாகுமாறு முன்னணி தமிழ் பத்திரிகையாளரும் உரிமைகள் பாதுகாவலருமான கணபதிப்பிள்ளை குமணனுக்கு மனு அனுப்பியுள்ளது. இது வடகிழக்கில் இராணுவ நில அபகரிப்புகள், போராட்டங்கள், காணாமல்…

பொலிஸாரின் அதிரடி சோதனையில் 800 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 838 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 20 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 675 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் மற்றும் குற்ற…

12 கிலோ குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கிய மூவர்

குஷ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை விமான நிலைய வருகை முனையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது…

இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்

பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் சமூக…