இன்று (09) நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆசிய ரக்பி எழுவர் அடங்கிய போட்டியில் இலங்கை அணி ஐக்கிய அரபு இராஜ்ஜிய (UAE) அணியை 26-24 என்ற கணக்கில் வீழ்த்தியது. 

அதன்படி, இலங்கை அணி ஆரம்ப சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, குழு Aயில் புள்ளிகள் பட்டியலில் தோல்வியடையாமல் உள்ளது. 

இன்று நடைபெற்ற முதல் போட்டியில், இலங்கை அணி ​ஹோங்கொங் அணியை 19-24 என்ற கணக்கில் வீழ்த்தியது. 

அதன் பிறகு, போட்டியை நடத்தும் அணியான இந்திய அணியையும் 24-05 என்ற கணக்கில் இலங்கை அணி எளிதாக தோற்கடித்தது. 

இந்தப் போட்டித் தொடர் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

By RifkaNF